Thursday, March 1, 2012

மனிதனின் வாழ்க்கை கிரகங்களின் கையில் பாகம் 2.

இறை நம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான் ஜோதிஷ சாஸ்திரத்தில் நம்பிக்கை இருக்கும். இறைவன் கிரகங்களை மனிதனைப் படைப்பதற்கு முன்பே படைத்து விட்டான். ஒவ்வொரு மனிதனும் பூமியில் பிறந்து வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் பொறுப்பை நவகிரகங்களிடம் ஒப்படைத்தான். படைத்தல் தொழிலை எப்படி பிரம்ம தேவன் பார்த்துக் கொண்டாரோ அதே போல் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க வேண்டிய நன்மை தீமைகளை முற்பிறவியில் அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு எற்ப வழங்க வேண்டும் என்பதே இறைவன் கிரகங்களுக்கு இட்ட கட்டளை. இறைவன் ஆனாலும் சரி, மனிதன் ஆனாலும் சரி கிரகங்கள் எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறதோ அந்த வழியில் தான் அவர்கள் செல்ல முடியும். இதற்கு உதாரணம் ஸ்ரீராமன் வனவாசம் சென்றதும், சீதையைப் பிரிந்ததும், மற்றும் அவன் அனுபவித்த விஷயங்கள் அனைத்துமே ஆகும். மனிதனாகப் பிறவி எடுக்கும் அனைவருக்கும் எப்படிப் பட்ட துன்பங்கள் வந்தாலும் நேர்மை தவறாமல் வாழ வேண்டும் என்பதற்கா கவே எடுக்கப் பட்ட அவதாரம் அது. துன்பங்கள் எவ்வளவு வாட்டினாலும் நேர்மை தவறாமல் வாழ்ந்திருந்தோம் என்றால் அதற்கேற்றாற்போல் இந்தப் பிறவியில் அவர்களது வாழ்க்கை சிறப்பாகவே அமையும். கர்மாக்களில் சஞ்சித கர்மா, பிராப்த கர்மா என்று உண்டு. சஞ்சித கர்மா என்பது முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் மூட்டை. பிராப்த கர்மா என்பது இப்பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் முற்பிறவியில் அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பதான் இப்பிறவி அமையும். மனிதன் பிறக்கும் போது இறைவனின் ஆணைப்படி கிரகங்கள் அவரவர் முற்பிறவியில் செய்த வினைக்கேற்றாற்போல் அவரவர் ஜாதகங்களில் இடம் பெற்று அதற்கேற்றாற் போல் பிரம்மதேவன் அவர்களது தலை எழுத்தை நிர்ணயம் செய்வான். 

2 comments:

Anonymous said...

மதிப்பிற்குரிய சீதா லக்ஷ்மி அம்மாவிற்கு ,

என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
உங்கள் ஜோதிட பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளன.
எனக்கும் ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளது .
கற்க வேண்டும் என்ற எண்ணமுமிருக்கிறது .
எனக்கு ஜோதிடம் வருமா ?
நான் சிம்ம ராசி , கன்னி லக்னம் .
நன்றி .

p.sivakami said...

மதிப்பிற்குரிய சீதா லக்ஷ்மி அம்மாவிற்கு ,
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
உங்கள் ஜோதிட பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளன.
எனக்கும் ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளது .
கற்க வேண்டும் என்ற எண்ணமுமிருக்கிறது .
எனக்கு ஜோதிடம் வருமா ?
நான் சிம்ம ராசி , தனுசு லக்னம் .
நன்றி .